1 சிந்தனை மலர் தொடுத்து செவிக்கினிய பாநூறு
தந்தனை நீ இத்தரணிக்கு - உந்தனை
எத்தனை கோடி யுகம்பல போனாலும்
சித்தம் மறப்பது அரிது.
2 சாதி வெறியரின்று சான்றோர் போர்வையிலே
நீதி தவறுவோர் நாடாள்வர் - போதிமர
புத்தனே, நீயின்று புவியிலில்லை, நன்றேயாம்
இத்தருணம் வாழ்வதிங்கு இழுக்கு .
3 மானுடம் பாடவந்த முணடாசுக்கவியரசே
தேனுடன் கலந்துண்டோம் உன்பாட்டை - வானுயர்
தமிழளித்தாய், தறிகெட்ட திருநாட்டைத்திருத்தவொரு
அமிழ்து எமக்களிப்பாய் என்று ?
4 வீரம் உன் வேதம், வீண்பேச்சு பகையுனக்கு
காரம் உன் கவிதைத்துளிகள் - பாரதியே
இன்று எம்நாட்டின் எழில்வளத்தைச்சுரண்டுமிந்தப்
பன்றிக்கூட்டத்தைத்துரத்த நீ வா!
5 காதலை உன்போலே கவிநயத்தில் தோய்த்தெடுத்து
தோதாய்ப்பொழிந்தவர் யாருமிலர் - ஏதேதோ
ட்விட்டரில் காதலாம், செல்போனில் முத்தமாம்
க்விக்பிக்ஸ் உலகமடா இது.
6 நல்லதோர் வீணையொன்றைப்புழுதியில் எறிதல் கண்டு
சொல்லொணாத்துயருற்றாய் சுடர்கவியே -- எல்லாமே
கனவாய்ப்போனதடா, காரிருள் சூழ்ந்ததடா
உனக்குக்குறையில்லை, உயிர்நீத்தாய் .
7 உன்னிறுதி ஊர்வலத்தில் உடனிருந்தோர் ஓரிருவர்
தன்னிகரில்லா பாரதிக்கிக்கதி - இந்நிலையில்
ஈனப்பிறவிகள், எத்தர்கள் வால்பிடிக்கும்
மானங்கெட்டவர் ஒரு கோடி.
8 திசம்பர் பதினொன்றில் திரள்வது சோகமே
கசக்கும் உண்மையிது பாரதி - பசப்புறு
வார்த்தைகள் சேர்த்து உன் பிறந்தநாளைப்பாடல்
நேர்த்தியுறு நன்செயலன்று.